புண்ணிய பூமி

சென்னைக்கு 313 கி.மீ தெற்கிலும்,திருச்சிக்கு 90 கி.மீ கிழக்கிலும், தஞ்சாவூருக்கு 40 கி.மீ வட-கிழக்கிலும் உள்ளது. சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் ஐவகை நிலங்களில் மூன்றாவது நிலமாக கருதப்படும் (வயலும் வயல் சார்ந்த) மருத நிலமாக கும்பகோணம் திகழ்கிறது. கும்பகோணம் உலகத்து உயிர்களின் பிறப்பிடமாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. சோழர் காலத்தில் தஞ்சை மாவட்டத்தின் தலைநகராக 60ஆண்டுகள் கும்பகோணம் திகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

கலை,கலாச்சாரம்,பக்தி,கணிதம்,சித்தமருத்துவம், இசை என பல்வேறு துறைகளில் தலைசிறந்தவர்களை இவ்வுலகிற்கு அறிமுகம் செய்த பெருமை இத்திருக்குடந்தைக்கு உண்டு. கும்பகோணத்தில் நகர் பகுதியில் மட்டுமே மூன்று பாடல் பெற்ற சிவத்தலங்கள் மற்றும் மூன்று திவ்ய தேசத் தலங்களும் உள்ளன. மேலும் 9 நவக்கிரக கோவில்களும் கும்பகோணத்தை சுற்றியே அமைந்துள்ளன. 12ஆண்டுகளுக்கு ஒருமுறை தலைமுறை தலைமுறையாக கொண்டாடப்படும் மகாமகப் பெருவிழா இவ்வூரின் சிறப்பம்சமாகும். உலகின் எட்டாவது உயரமான கோபுரம் சாரங்கபாணி கோவில் கோபுரம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். 3000திற்கும் அதிகமான கணித தேற்றங்களை அளித்த கணிதமேதை சீனிவாச ராமனுஜனை உலகிற்கு அளித்த பெருமை எங்கள் ஊரையே சேரும். சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பட்ட அகத்தியரின் சமாதி இங்குதான் உள்ளது. உயிர் கொடுத்த கடவுளுக்கு உருவம் கொடுப்பதிலும்(சிலை) விதையில்லா பயிறுக்கு(வெற்றிலை) உயிர் கொடுப்பதிலும் எங்கள் மண்ணின் மைந்தர்கள் அத்தனை பேரும் பிரம்மாக்கலே.

கும்பகோணம் பெயர் காரணம்

இலக்கியத்தில் குடமூக்கு என்று குறிப்பிடப்பட்டாலும் மக்கள் வழக்கில் உள்ள கும்பகோணம் என்ற பெயரே பிரசித்தமானது. பேரூழிக் காலத்தில் பிரமனின் வேண்டுகோளுக்கிணங்கி, இறைவன் தந்த அமுத கலசம் தங்கிய இடமாதலின் இத்தலம் கும்பகோணம் என்று பெயர் பெற்றது. குரு சிம்மராசியில் நிற்க, சந்திரன் கும்பராசியிலிருக்கும் (மாசிமக) பௌர்ணமி நாளில் தான் மகாமகம் நடைபெறுகிறது. இத்தீர்த்தம், அமுதகும்பம் வழிந்தோடித் தங்கியதால் “அமுதசரோருகம்” என்றும் அழைக்கப்படுகிறது.
பிரளய காலத்தில் பிரம்மா வேதங்களை காக்க ஒரு குடம் செய்ய முடிவு செய்தார் , உலகத்தின் பல்வேறு பகுதிலீருந்து மன் எடுத்து செய்ததில் குடங்கள் பிண்டமாகின , இறுதியாக திருச்சேறையில் (சாரஷேக்திரம் ) மன் எடுத்து குடம் செய்து வேதங்களை காத்தார்.

 குடத்தின் வாசல் குடவாசல் குடத்தின் கோணம் கும்பகோணம் (மத்யமம்) நடுவே சாரக்ஷேத்ரம் என்னும் திருச்சேறை.

Contact Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.